/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ஜமாபந்தி முகாம்
/
விழுப்புரத்தில் ஜமாபந்தி முகாம்
ADDED : மே 21, 2025 11:20 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.
விழுப்புரம்
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், வருவாய் தீர்வாய அலவலர் சப்கலெக்டர் முகுந்தன் தலைமை தாங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
தாசில்தார்கள் கனிமொழி, ஆதிசக்திசிவகுமரிமன்னன், ஆனந்தன், துணை தாசில்தார்கள் வெங்கடபதி, குணசேகரன், திருமாவளவன் கலந்து கொண்டனர்.
காணை குறுவட்டங்களுக்கு உட்பட்ட கல்பட்டு, காணை, மாம்பழப்பட்டு, சிறுவாக்கூர் உள்ளிட்ட கிராம மக்களிடம் 145 மனுக்கள் பெறப்பட்டது.
செஞ்சி
செஞ்சியில் நடந்த ஜமாபந்தி துவக்க விழாவில், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம் தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வக்குமார் வரவேற்றார். ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசெல்வன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் புஷ்பாவதி, ஜமாபந்தி மேலாளர் பாலமுருகன், துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், தேர்தல் துணை தாசில்தார் சந்திரமோகன், வட்ட வழங்கல் அலுவலர் குமரன், ஆர்.ஐ.,க்கள் பிரபுசங்கர், கீதா, சத்யா, சிவக்குமார் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தாலுகா அலுவலத்தில் நடந்த ஜமாபந்திக்கு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, சமூக நல தாசில்தார் வேல்முருகன், நேர் முக உதவியாளர் கோவர்த்தன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், துணை தாசில்தார்கள் அகமது அலி, ஹரிதாஸ், தட்சிணாமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர்கள் தமிழரசன், தேவசேனா, ராஜலட்சுமி, விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., சங்க தலைவர் சவுந்தர்ராஜன் கலந்து கொண்டனர்.
வானுார்
வானுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் அரிதாஸ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் வித்யாதரன், ஒன்றிய சேர்மன் உஷா முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தனர். 13 வருவாய் கிராம பொதுமக்கள் பட்டா மாற்றம், இலவச மனைபட்டா உள்ளிட்ட கோரிக்கை மனு வழங்கினர்.
மேல்மலையனுார்
மேல்மலையனுார் தாலுகா அலவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் தனலட்சுமி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.