நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: நகை தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் ராஜி,45; நகை வேலை செய்யும் தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, மனைவியும், 1 வயதில் மகளும் உள்ளனர்.
இவருக்கு, சிறுநீரக பாதிப்பால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. நேற்று காலை வயிற்று வலி அதிகரிக்கவே விரக்தியடைந்த ராஜி, வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.