/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி துணைத் தலைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
ஊராட்சி துணைத் தலைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : பிப் 04, 2024 04:46 AM
மயிலம், : மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; பாத்திரக்கடை உரிமையாளர். இவரது மனைவி புவனேஸ்வரி, 38; ஜக்காம்பேட்டை ஊராட்சி துணைத் தலைவர்.
கணவன், மனைவி இருவரும் திண்டிவனத்தில் வாடகை வீட்டில் வசித்தபடி கடையை கவனித்து வந்தனர். வார விடுமுறை நாட்களில் ஜக்காம்பேட்டையில் வந்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை ஜக்காம்பேட்டையில் உள்ள வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜக்காம்பேட்டை வந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம், ஜிமிக்கி, தோடு, மூக்குத்தி என 3 சவரன் நகைகளும், அரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம், டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், மயிலம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.