/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் நகை பறிப்பு
/
விழுப்புரத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் நகை பறிப்பு
விழுப்புரத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் நகை பறிப்பு
விழுப்புரத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் நகை பறிப்பு
ADDED : அக் 20, 2024 04:26 AM
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 2 இடங்களில், நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த தொடர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி ரூபி, 28; இவர் நேற்று முன்தினம் இரவு, தனது தந்தை அந்தோணிசாமியுடன், பைக்கில், விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் வழியாக சென்றார். அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சென்ற போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ரூபி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை அறுத்து கொண்டு, தப்பினர்.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் ஸ்டீபன், 35; இவர் நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, போன் அழைப்பு வந்ததால், சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி போன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த 2 பேர் ஸ்டீபனை கல்லால் தாக்கினர். இதில், நிலை தடுமாறியதும் அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்ததுடன், அவரது பைக்கையும் பறித்துச் சென்றனர்.
இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் முறையே விழுப்புரம் டவுன் மற்றும் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நகரில் இரு இடங்களில் நடந்த, நகை பறிப்பு சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.