/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை துவக்கம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை துவக்கம்
ADDED : அக் 24, 2025 03:24 AM
விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான சேர்க்கை வரும் நாளை தேதி துவங்கவுள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி நாளை துவங்க உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, நாளை வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
இந்த பயிற்சி இரு மாதங்கள் (100 மணி நேரம்) அளிக்கப்படுகிறது. இதில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில்லை. பயிற்சி கட்டணம் ரூ.4,550. இந்த கட்டணத்தில் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
மொத்தம், 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சி, 60 மணி நேரம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சி முடித்தோர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், நகை மதிப்பீடாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை நேரடியாகவும், தொலைபேசி 04146 259467, மொபைல் 9442563330 மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

