/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செவிலியர் வீட்டில் நகை திருட்டு
/
செவிலியர் வீட்டில் நகை திருட்டு
ADDED : அக் 29, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் செவிலியர் வீட்டில் 6 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் சபாபதி மனைவி சிவகாமசுந்தரி, 57; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் 6 சவரன் செயினை படுக்கை அறையில் கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது நகையை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

