/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சலுான் கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை
/
சலுான் கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை
ADDED : செப் 27, 2025 07:57 AM
விழுப்புரம் : சலுான் கடை உரிமையாளர் வீட்டில் 22 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், பானாம்பட்டு பாதையைச் சேர்ந்தவர் கணேஷ், 42; விழுப்புரத்தில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது மனைவி புவனாவை பார்க்க சென்றார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த அதிலிருந்த 22 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.