ADDED : அக் 25, 2025 06:27 AM
வானூர்: வானுார் அருகே அம்மன் கோவிலில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேமங்கலம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக குப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
அவர் நேற்று முன்தினம் மாலை அபிஷேக ஆராதனை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மீண்டும் நேற்று காலை 7:00 மணிக்கு நடை திறந்து பூஜை முடித்து விட்டு பக்கத்து தெருவில் உள்ள மற்றொரு அம்மன் கோவிலை திறந்து அங்கு பூஜை செய்துவிட்டு மீண்டும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது, முத்துமாரியம்மன் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க செயின் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் வானுார் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

