/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
/
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
ADDED : நவ 21, 2024 12:37 AM

விழுப்புரம்,: நான் முதல்வன் திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம் சார்பில் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் நடந்த முகாமில், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, மயிலம் பொறியியல் கல்லுாரி, ரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் இருந்து 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணிக்கு தேர்வாகி சேர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் தமிழரசன் தலைமை தாங்கி, துவக்க உரையாற்றினார். பேராசிரியர் ஜகோபின்சுஷ்மி வரவேற்றார். நான் முதல்வன் திட்ட மேலாளர் கீர்த்தனா நன்றி கூறினார்.