/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்
/
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 02, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வடக்குச்சிப்பாளையம ஸ்ரீவெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
தாளாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். துணை தாளாளர் குபேரன் முகாமை துவக்கி வைத்து பேசினார். புதுச்சேரி ஈட்டன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் நடந்த இம்முகாமில் இறுதியாண்டு மாணவர்கள் 56 பேர் வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல், சென்னை வீல்ஸ் இந்தியா நிறுவனம், திருவாண்டார்கோவில் லுாக்காஸ் டி.வி.எஸ்., ஆகியவற்றில் பணிபுரிய 59 மாணவர்கள் தேர்வாகினர்.
ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.