ADDED : மார் 12, 2024 05:18 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம், : விழுப்புரம் அருகே வடகுச்சிப்பாளையத்தில் உள்ள வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் சென்னை ஜே.பி.எம்., ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பங்கேற்று, 67 பேரை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். நிகழ்ச்சிக்கு, தாளாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். துணை தாளாளர் குபேரன் சிறப்புரையாற்றினார்.
நிறுவன மேம்பாட்டு துறை தலைவர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர் உதயகுமார் செய்திருந்தார்.
