ADDED : மார் 16, 2026 04:10 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
தேசிய மற்றும் மாநில அளவிலான அரசாங்க வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அறிமுக உரையாற்றினார்.
பயிற்சியாளர் கேம் அகாடமி ஜீவா தேசிய அளவிலான போட்டிகளில் வெல்வது எப்படி என்றும் கிஷோர் ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி என்றும் பேசினர். கருத்தரங்கில் அனைத்து துறை பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
