/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெ.ஆர். நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ஜெ.ஆர். நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 29, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த அவனம்பட்டு ஜெ.ஆர்.நேஷனல் பள்ளியில் 'டிரையல் பிளேசர்-' தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் துவக்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன், பள்ளி முதல்வர் பானுமதி வெங்கட்ரமணன், புதுச்சேரி ஸ்ரீபாரத் வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சாந்தி ஜெய்சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கல்வித் துறையைச் சேர்ந்த சிறப்பு வல்லுநர்கள் நடுவர்களாக பங்கேற்று படைப்புகளை ஆய்வு செய்தனர்.