ADDED : பிப் 24, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில், நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 78வது பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முன்னதாக அவர் ஜெ.,வின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பிரத்திவிராஜ், அவைத்தலைவர் தண்டபாணி, துணைச் செயலாளர் நசீர், பொருளாளர் முனுசாமி, அணி செயலா ளர்கள் கண்ணன், ஸ்ரீதர், விஜயபாஸ்கர், மணிகண்டன், ஜெ., பேரவை அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
