
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு, மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட கிழக்கு பகுதி துணைத் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக காலை 7:00 மணிக்கு குரு பூஜையும், 9:00 மணிக்கு ஆதிபராசக்தி படத்திற்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது.
நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, காஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஏந்தி சென்றனர். மன்ற தலைவர் முரளிதர், மாவட்ட இணைச் செயலாளர்கள் சுகுணா, பூபாலன், வேள்விக்குழு முத்தமிழ், உட்பட பலர் பங்கேற்றனர்.