/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் காணும்பொங்கல் விழா கொண்டாட்டம்: நீர் நிலைகளில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
/
மாவட்டத்தில் காணும்பொங்கல் விழா கொண்டாட்டம்: நீர் நிலைகளில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
மாவட்டத்தில் காணும்பொங்கல் விழா கொண்டாட்டம்: நீர் நிலைகளில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
மாவட்டத்தில் காணும்பொங்கல் விழா கொண்டாட்டம்: நீர் நிலைகளில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
ADDED : ஜன 18, 2024 04:22 AM

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில், காணும்பொங்கல் விழாவையொட்டி தென்பெண்ணை ஆறு, எல்லீஸ் அணைக்கட்டு, வீடுர் அணை, ஆரோவில் கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான பொது மக்கள் திரண்டு நீராடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தை திருநாள் பொங்கல் விழா கடந்த 14ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, 15ம் தேதி தை பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, நேற்று காணும் பொங்கல் விழா பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பிடாகம், குச்சிப்பாளையம் பகுதியில் விழுப்புரம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து, ஆற்றில் நீராடியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
இந்தாண்டு ஆற்றில் தண்ணீர் செல்வதால், சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல், விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் விழுப்புரம், திருவெண்ணை நல்லூர் சுற்றுப்புர கிராம மக்கள், விழுப்புரம் நகர மக்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு திரண்டு வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பழைய அணைக்கட்டு பகுதியில், இரண்டு கரை பகுதிகளிலும் குளித்தும் மகிழ்ந்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திரளான மக்கள் கூட்டம் இருந்தது. இதே போல், அருகே கொங்கராயநல்லூர், அரகண்டநல்லூர் ஆற்று பகுதியிலும் மக்கள் திரண்டு வந்து நீராடி மகிழ்ந்தனர்.
விழுப்புரம் அருகே வீடூர் அணை பகுதியில் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து, அணைக்கட்டில் நிரம்பியுள்ள பகுதியிலும், அருகே உள்ள பூங்கா பகுதியிலும் விளையாடி மகிழ்ந்தனர். இதே போல், செஞ்சி கோட்டை, ஆரோவில் கடற்கரை, மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை, தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிகளிலும் ஏராளமான பொது மக்கள் திரண்டு வந்து காணும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலம் முருகர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோவில், அனந்தபுரம் தாளகிரீஸ்வரர் கோவில், காகுப்பம் அய்யனாரப்பன் கோவில், தாண்டவமூர்த்திக்குப்பம் கலியபெருமாள் கோவில், தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில், தும்பூர் நாவாத்தம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், காணும் பொங்கல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.