ADDED : ஜூலை 30, 2025 11:09 PM

அ நிறம் | அளவு
கோட்டக்குப்பம்: மாநில கராத்தே போட்டியில், கோட்டக்குப்பம் வீரர்கள் பல்வேறு பதக்கங்களை குவித்தனர்.
ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சார்பில், டிரடிஷனல் அண்ட் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் மூலம் சென்சாய் சத்யா தலைமையில் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களை நகர மன்ற சேர்மன் ஜெயமூர்த்தி, சென்சாய்கள் எல்லப்பன், விஷ்ணு, மோகனா, ஜெகன், சந்தோஷ், முக்தார் ஆகியோர் பாராட்டினர்.
