/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கர்ணாவூர் சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் அவதி
/
கர்ணாவூர் சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 19, 2025 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கந்தலான சாலையால்,கர்ணாவூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டிவனம் புறவழிச்சாலையில் இருந்து, கர்ணாவூர் கிராமத்திற்கு செல்லும் சாலை வழியாக, அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாகன ஓட்டிகள், நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த சாலை தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.