/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா
/
விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா
விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா
விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா
ADDED : டிச 02, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், நேற்று கைசிக ஏகாதசி மகோற்சவம் நடந்தது.
அதனையொட்டி, காலை 9:00 மணியளவில், ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் கருட வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, உற்சவ மண்டபத்தில் அருள்பாலித்தார்.
இதையடுத்து, 15க்கும் மேற் பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு நாதஸ்வரம், மேளக்கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.