/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருணாநிதி பிறந்த நாள் மா.செ., அழைப்பு
/
கருணாநிதி பிறந்த நாள் மா.செ., அழைப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:17 PM

செஞ்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளர். எனவே, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கட்சி நிர்வாகிகள் கொடி தோரணங்களைக் கட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி சேலையும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்.
மேலும் மருத்துவ முகாம்கள், கண் பரிசோதனை, ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும். மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.