/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 10, 2025 12:40 AM

திண்டிவனம்: ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 114 மாணவர்களில் 113 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி பத்மபூர்வஜா 600க்கு 589 மதிப்பெண் பெற்று முதலிடமும், திண்டினம் கல்வி மாவட்டத்தில் மூன்றாமிடமும் பிடித்தார். ஹேமலதா 582, பாக்கியலட்சுமி 581 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டு மற்றும் 3ம் இடங்களை பிடித்தனர்.
மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 17 பேர், 500க்கு மேல் 48 பேர் எடுத்துள்ளனர்.
கணிதம் பாடத்தில் 3 பேர், கணினி அறியவிலில் 10, கணினி பயன்பாடு பாடத்தில் 5 பேர் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குநர் வனஜா, செயலாளர் சந்தோஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.