/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கே.ஜி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
/
கே.ஜி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஏப் 15, 2025 08:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே அசோகபுரியில் உள்ள கே.ஜி., வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் சுந்தர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பவுலின் வரவேற்றார். திரைப்பட நடிகர் மகேஷ், கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பின், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முதல்வர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.

