/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது கோட்டக்குப்பம் போலீசார் அதிரடி

ADDED : ஏப் 18, 2025 04:32 AM

வானுார்: புதுச்சேரியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக தமிழகப்பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தலைமை காவலர் பாண்டியன், போலீஸ்காரர் சக்திவேல் ஆகியோர் நேற்று கிளியனுார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஹூரோ ஹோண்டா பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முரணான பதில்களை கூறவே அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர்.
அதில், புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அதன் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், செங்கல்பட்டு மாவட்டம் மாதுார் அடுத்த விளாங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கணேஷ், 26; பூபாலன் மகன் யோகபிரசாத், 24; ஆகியோர் என்பதும், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.