/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போன் நேரு பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
போன் நேரு பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 19, 2025 12:21 AM

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி குழுமங்களின் தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்க செயலாளர் விஜயசாந்தி வாசுதேவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் லயன்ஸ் சங்க இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் மதிவாணன் மற்றும் பொருளாளர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.
விழாவில் கிருஷ்ணர் மற்றும் ராதை மாறுவேட போட்டி, நடனம், பாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காமதேனு லயன்ஸ் சங்க மண்டல தலைவர் ஜெயராமன், வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன், சங்கத் தலைவர் நாகராஜன், முதல் துணைத் தலைவர் இளம்வழுதி, பொருளாளர் வீரப்பன், இயக்குநர் சேகர் மற்றும் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

