
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; மயிலம் அடுத்த ரெட்டணையில் உள்ள ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து ஊர்வலம் வந்தனர். வெண்ணெய் பானை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பழனியப்பன் முதுநிலை முதல்வர் அகிலா, ஹோலி ஏஞ்சல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் கீர்த்திவாசன், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஏரோமிஸ் பிஸ்கோ, வெங்கடாஜலபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் விமல்ராஜ் நன்றி கூறினார்.