/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
ADDED : மே 27, 2025 07:11 AM

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.
பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு வள்ளி தெய்வானை சுப்பிர மணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலத்தில் காட்சியளித்தார்.
விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.