/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரம் கோவிலில் கிருத்திகை வழிபாடு
/
கண்டாச்சிபுரம் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED : டிச 04, 2025 05:27 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகளுக்கு அபிஷேகமும்,தீபாரதனையும் நடைபெற்றது.பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் சார்பில் தேவார,திருவாசக பாடல் இசையுடன் ஊர்வலம் நடந்தது.
இதில் கண்டாச்சிபுரம் ,அங்குராயநத்தம்,மடவிளாகம் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வெற்றிவேல்,பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

