/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 17, 2025 12:21 AM

செஞ்சி : கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் 35ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த கவரை கிராமம் சிறுனாம்பூண்டி சாலையில் உள்ள வலம்புரி விநாயகர் ஜடாமுனீஸ்வரர், அங்காளம்மன், மாரியம்மன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, 35ம் ஆண்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு காலை 9:00 மணி முதல் 10:30 வரை ஊச்சங்காடு உப்புலம் செந்துார்முருகன் கோவில் வெங்கடாசலம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்படும் மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடந்தது.
பகல் 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு, 9:00 மணிக்கு வான வேடிக்கை, மேடை நாடகம் நடந்தது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் விழா குழு குமரேசன் சுவாமிகள், சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.