/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்தால்வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
முத்தால்வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 30, 2025 11:51 PM

விழுப்புரம்: முத்தால்வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்தால் வாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி நிகழ்வுகளும், கடந்த, 26ம் தேதி காலை பூர்ணாஹீதியும், தீபாராதனையும் நடந்தது. கடந்த, 27ம் தேதி மாலை முதல்கால யாக பூஜை துவங்கியது. கடந்த, 28ம் தேதி காலை விசேஷ சாந்தியும், இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது.
மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் காலை 6:00 மணியளவில் கோ பூஜையும், நான்காம் கால யாக பூஜையும் நடந்தது.
காலை 8:30 மணிக்கு தீபாராதனையும், கடம் புறப்பாடாகி, காலை 9:30 மணிக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில், முத்தால் வாழியம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.