/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 10, 2025 10:11 PM
விழுப்புரம்; அ.குச்சிப்பாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் அருகே வி.அரியலுார் ஊராட்சி குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 7ம் தேதி காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
அதைத் தொடர்ந்து, நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை நடந்தது. அன்று மாலை முதல் கால யாக பூஜை நடந்தது. மறுநாள் இரண்டாம் கால யாக பூஜையும், காப்புகட்டுதலும் நடந்தது. நேற்று முன் தினம் காலை 8.45 மணிக்கு கடம் புறப்பாடும், செல்வ விநாயகர் கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பாலமுருகன் சன்னதி, சீனுவாசபெருமாள் சன்னதி, திரவுபதியம்மன் சன்னதி, அய்யனாரப்பன் சன்னதி, கெங்கையம்மன் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.