/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
/
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 15, 2025 06:18 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 11ம் தேதி கணபதிேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு கணேசன், பாலசுப்ரமணியன் சிவாச்சாரியார்கள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர்.
அதே நேரத்தில் சத்தியாம்பிகை, விநாயகர், முருகன் சன்னதிகள் மற் றும் ராஜகோபுரம் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், அறநிலைய துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் பல்லவி, திருப்பணிக்குழு தலைவர் செல்வநாதன், தேவ நாதன், செயல் தலைவர் அன்புமணி, செயலாளர் ஜோதிராஜா, பொருளாளர் கணேசன்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், சாந்தி ராமாராவ், ராஜாம்பாள் சுப்ரமணி, ஜீவன் பார்க் ராஜா.
அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சுப்ரமணி, பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் மணிமாறன், பா.ஜ., மாவட்ட பொருளாளர் முருகன், பனையபுரம் ஊராட்சி தலைவர் காந்தரூபி வேல் முருகன், துணைத் தலைவர் கலா முருகன்.
உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி தர்மா, பிரகாஷ், குமுதாபாபு, அஸ்வினி முருகன், ராஜா, பாக்கியமேரி லுார்துசாமி, வெங்கடேசன், வெங்கடவரதன், ஊராட்சி செயலாளர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் இருந்து ஏராளமனோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செந்தில் முருகன், விவேகானந்தன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.