/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2025 10:31 PM

விழுப்புரம் : மயிலம் பச்சைவாழியம்மன், மன்னாதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஆலகிராமம், மண்டகப்பட்டு, அவ்வையார் குப்பம் ஆகிய கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள பச்சைவாழியம்மன், மன்னாதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, கோ பூஜை, சுமங்கலி பூஜை, வேள்வி வழிபாடு நடந்தது.
7ம் தேதி வேள்வி வழிபாடும், மாலையில் 2ம் கால வேள்வி வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு மருந்து சாத்துதல், நாடி சந்தானம், திருக்குடத்தில் புனிதநீர் கொண்டு வரும் நிகழ்வு நடந்தது.
காலை 8.00 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியர்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.