/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலப்பட்டு சிவகாந்தி ஈஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
பாலப்பட்டு சிவகாந்தி ஈஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
பாலப்பட்டு சிவகாந்தி ஈஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
பாலப்பட்டு சிவகாந்தி ஈஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : பிப் 21, 2024 10:34 PM
செஞ்சி : பாலப்பட்டு சிவகாந்தி ஈஸ்வரன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
செஞ்சி அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள சிவகாந்தி ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (22ம் தேதி) நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு சிவகாந்தி ஈஸ்வரர் கரிக்கோலம் நடந்தது. மாலை முதல் கால யாக சால பூஜைதொடங்கியது.
அதில் அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கும்ப அலங்காரம் ஆகியன நடந்தது.
இரவு கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, எந்திர பிரதிஷ்டையை தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
இன்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், 108 திரவிய ஹோமமும், 10 மணிக்கு மகா பூர்ணஹுதியும் 10.05 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மூலஸ்தான சிவகாந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.