
செஞ்சி, ; செஞ்சி அடுத்த வடகால் செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து, மகா மண்டபம், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேக நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் காலையாக சாலை பூஜையும், இரவு சாமி அஷ்டபந்தனம் சாற்றுதல், கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தத்துவர்த்தனை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.
இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்தீபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயராகவன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

