
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குத்தாம்பூண்டியில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில், அப்பகுதி மக்களால் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் கடந்த 26ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது.
நேற்று காலை 9:40 மணியளவில், நான்காம் கால பூஜை முடிவடைந்து, கடம் புறப்பாடாகி காலை 10:10 மணியளவில், செத்தவரை சிவஜோதி மோன சித்தர், கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

