/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் குருபூஜை விழா
/
கண்டாச்சிபுரத்தில் குருபூஜை விழா
ADDED : பிப் 22, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் சற்குரு சச்சிதானந்தம் பழனிசாமி குருபூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு கோபூஜையும் 10:00 மணிக்கு படத்திறப்பும் யாகசாலை பூஜையும் நடந்தது. முன்னதாக தேவார இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சற்குரு சுவாமிகள் படத்திற்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை சிறப்பு பூஜை நடந்தது.
கண்டாச்சிபுரம், அடுக்கம், நல்லாபாளையம்,மேல்வாலை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சற்குரு சச்சிதானந்தம் சுவாமி வழிபாட்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.