குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் :இடுபொருட்கள் வழங்கல்
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் :இடுபொருட்கள் வழங்கல்
UPDATED : ஜூலை 02, 2026 10:30 PM
ADDED : ஜூலை 02, 2026 09:53 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கங்கா கவுரி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் மானியத்தில் இடுபொருட்கள், உயிர் உரங்கள் வழங்கி பேசுகையில், 'வேளாண்மை துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு அரசு, இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு ஏக்கருக்கு 4000 ரூபாய், உயிர் உரங்களுக்கு 60 ரூபாயும் நுண்ணுட்ட உரங்களுக்கு 147 ரூபாயும் மானியமாகவும் மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய நெல் ரகங்கள் கிலோவிற்கு 10 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
விக்கிரவாண்டி வேளாண்மை விரிவாக்க மையத்திலும், எண்ணாயிரம் விதை கிடங்கிலும் விவசாயிகள் பெறலாம். இத் திட்டம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்' என்றார்.
வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் திவ்ய பாரதி, கணேசன், கண்காணிப்பாளர் பவானி மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
