/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்பனை 9 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை 9 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 20, 2025 12:07 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, குட்கா விற்ற 9 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், தொடர் சோதனை செய்து வருகின்றனர். விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதோடு, கடைக்கும் 'சீல்' வைத்து வருகின்றனர். நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி, வி.சாலை, நேமூர், பேரணி ஆகிய கிராமங்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, 9 கடைகளில் தடை செய்த குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அந்த 9 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்ததோடு, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

