ADDED : ஜன 08, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே காணாமல் போன தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த குமளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜன், 44; இவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 3ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தம்பி ராமராஜன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.