ADDED : ஜூன் 25, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
செஞ்சி: வயிற்று வலியால் கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அடுத்த ஊரணி தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 42: கூலி தொழிலாளி. இவரது மனைவி 17 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரமேஷ், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
குடும்பத்தினர் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
