ADDED : செப் 14, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி மகன் தங்கதுரை, 45; கூலித் தொழிலாளி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால், வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு, தங்கதுரை குடித்துவிட்டு வந்ததை, அவரது மனைவி சூர்யா தட்டிக் கேட்டு திட்டியுள்ளார்.
இதனால், மனமுடைந்த தங்கதுரை வீட்டில் புடவையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
