தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரத்திலிருந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி

 மரத்திலிருந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி

 மரத்திலிருந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி


ADDED : ஏப் 12, 2026 03:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 03:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி, 46; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஆனத்துார் கிராமத்தில் இளநீர் பறிக்க தென்னை மரத்தின் மீது ஏறியபோது தவறி கீழே விழுந்து மயங்கினார்.

உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராமமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us