/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலி
/
கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலி
ADDED : மே 26, 2025 11:40 PM
மயிலம் : மயிலம் அருகே கார் மோதிய விபத்தில் கட்டட கூலித் தொழிலாளி இறந்தார்.
மயிலம் அடுத்த நெடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 60; கட்டட கூலித் தொழிலாளி. இவர், தினமும் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றவர் வேலை முடிந்து மாலை பஸ்சில் வீடு திரும்பினார்.
பாலப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இரவு 8:00 மணிக்கு இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார்.
அப்போது, திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.