ADDED : நவ 01, 2025 02:52 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே டாட்டா ஏஸ் வாகன மோதி கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆமூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பாலசுப்பிரமணியம், 40; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 28ம் தேதி பைக்கில் திருக்கோவிலுார்-மடப்பட்டு சாலை வழியாக சென்ற போது, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியது.
அதில் படுகாயமடைந்தவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
