/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி உயிருடன் மீட்பு
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி உயிருடன் மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி உயிருடன் மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி உயிருடன் மீட்பு
ADDED : டிச 08, 2024 05:41 AM
கண்டமங்கலம் : குயிலாப்பாளையம் பம்பையாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கூலித்தொழிலாளியை இளைஞர்கள் உயிருடன் மீட்டனர்.
பெஞ்சல் புயல் காரணமாக கண்டமங்கலம் அடுத்த குயிலாப்பாளையம் பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சுற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது.
அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தனஞ்செயன் 46; தரைப்பாலத்தின் வழியே காலை 10:00 மணிக்கு ஆற்றைக் கடந்த போது தண்ணீரின் வேகத்தால் வழுக்கி விழுந்த அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் செல்லப்பட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றங்கரையில் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அமரன் என்பவர் தனஞ்செயன் ஆற்றில் அடித்துச் செல்வதைக் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
அப்போது ஆற்றங்கரை பக்கம் இருந்த மணிகண்டன், 36; நவேதன் 30: ஆகியோருடன் அமரனும் சேர்ந்து, ஆற்றில் குதித்து நீந்திச்சென்று உயிருக்கு போராடிய தனஞ்செயனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.