/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் ஏரி உடைந்தது 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர் மூழ்கியது

ADDED : டிச 04, 2024 08:08 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பகுதியில் அடுத்த அடுத்த ஏரிகள் உடைந்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம், மழவந்தாங்கல் பகுதிகளில் உள்ள காப்புக்காடு மற்றும் மலைகளில் பெய்த மழை காரணமாக வீரங்கிபுரம் ஏரி நிரம்பியது. தொடர்ச்சியான நீர்வரத்து காரணமாக வீரங்கிபுரம் ஏரியின் ஒரு பகுதி உடைந்து, மடவிளாகம் ஏரியில் கலந்ததால் மடவிளாகம் ஏரியும் உடைந்தது.
இதனால், கண்டாச்சிபுரம், மடவிளாகம், செங்கமேடு பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது.
மேலும் தொடர்ச்சியாக வெளியேறும் தண்ணீரால் இந்த ஆண்டு ஏரி பாசனத்தின் மூலம் பயனடையும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.