/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க லட்சுமணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க லட்சுமணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க லட்சுமணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க லட்சுமணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 21, 2024 11:25 PM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உடைந்த தளவானுார் அணைக்கட்டு விரைந்து சீரமைக்க வேண்டும் என, லட்சுமணன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பி, உடன் சீரமைக்க வலியுறுத்தி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் தளவானுார் , கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே, தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதியில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் கனமழை வெள்ளத்தால் உடைந்தது. அப்போது வெள்ள பாதிப்பை தடுக்க, அந்த தடுப்பணை வெடி வைத்தும் தகர்க்கப்பட்டன. தரம் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணையை மீண்டும் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விழுப்புரம் தி.மு.க., எம்.எல்.ஏ., லட்சுமணன், நான் முதல்வன் திட்டத்தின் 10 முக்கிய கோரிக்கையில், தளவானுாரில் புதிய அணைக்கட்டு கட்ட அரசிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது, லட்சுமணன் எம்.எல்.ஏ., புதிய அணைக்கட்டு கட்ட வேண்டும் என, சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அப்போது, கடந்த 2020-21ல் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து சேதமடைந்து கிடக்கிறது.
அந்த தடுப்பணை மீண்டும் எப்போது கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், உடைப்பு ஏற்பட்ட தளவானுார் தடுப்பணையை சீரமைக்க, தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.