/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வருடன் லட்சுமணன் எம்.எல்.ஏ., சந்திப்பு
/
முதல்வருடன் லட்சுமணன் எம்.எல்.ஏ., சந்திப்பு
ADDED : ஏப் 10, 2025 04:54 AM

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலினை, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன், நேற்று சட்டசபையில் நேரில் சந்தித்து, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார்.
பின்பு லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறுகையில்; தமிழ்நாடு போராடி வெல்லும் என்பதை நிருபிக்கும் வகையில், மாநில அரசு மசோதாக்களுக்கு இடையூராக கவர்னர் இருந்தால், நீதிமன்றம் அணுகி தீர்வு காண முடியும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியா உள்ள அனைத்து மாநிலத்திற்கும் தமிழக முதல்வர் பெற்று கொடுத்துள்ளார் என கூறினார்.