ADDED : ஜூலை 19, 2025 03:03 AM

விழுப்புரம் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரில் லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். இதில், அவர் பேசுகையில், 'கடந்த 15ம் தேதி முகாமை, முதல்வர் துவக்கி வைத்து தமிழகம் முழுவதும் நாள்தோறும், 100 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் நடக்கும் முகாம்களில் பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். விடுபட்ட மகளிர், இம்முகாம்களில் மனு அளித்து உரிமை தொகை பெறலாம். இங்கு அளிக்கும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வுகாணப்படும்,' என்றார்.
அப்போது, ஊராட்சி உதவி இயக்குநர் மஞ்சுளா, தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ.,க்கள் தாஸ், கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் முருகவேல், சேர்மன் சச்சிதானந்தம் மாவட்ட பிரதிநிதி முருகன், கண்ணப்பன், விவசாய அணி கேசவன், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், ஒன்றிய துணை செயலாளர் தேவகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.