ADDED : மார் 08, 2026 04:51 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில், விளக்கு ஏற்றும் விழா நடந்தது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் பொற்செல்வி வரவேற்றார். இ.எஸ்., கல்விக் குழும மேலாண்மை தலைவர் செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை துணை செவிலிய மேற்பார்வையாளர் சத்யகனி தங்கராஜ் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள், செவிலியர் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், 121 புதிய மாணவர்களும் விளக்குகளை ஏற்றி செவிலியர் பணியை துவக்கி வைத்தனர். 2024-25ம் ஆண்டிற்கான வாரியம் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
துணை முதல்வர் கார்த்தி நன்றி கூறினார்.
